

ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் கத்ரா நகரில் மாதா வைஷ்ணவ தேவி பவன் பகுதியருகே புதுவருட கொண்டாட்டங்களை முன்னிட்டு மக்கள் அதிக அளவில் கூடியுள்ளனர்.
இதில், திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால், மக்கள் பலர் நெரிசலில் சிக்கி காயமடைந்து உள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.