பூமிக்கு அடியில் கோடிக்கணக்கில் 500 ரூபாய் நோட்டுகள்.. போலீசார் அதிர்ச்சி

பூமிக்கு அடியில் 3 பீப்பாய்களில் கட்டுகட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
பூமிக்கு அடியில் கோடிக்கணக்கில் 500 ரூபாய் நோட்டுகள்.. போலீசார் அதிர்ச்சி
Published on: 

லக்னோ,

உத்திர பிரதேசத்தில் பூமிக்கு அடியில் பீப்பாய்களில் கோடிக்கணக்கான ரூபாய் பறிமுதல்செய்யப் பட்டது.

பொதுமக்களுக்கு சந்தேகம்

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியை சேர்ந்தவர் ராகேஷ் யாதவ் என்கிற மகாகால். இவரது சொத்து மதிப்பு மீது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு சந்தேகம் எழுந்தது. அவரது மூதாதையர் வீட்டில் பெரும் மதிப்பிலான பணம் இருக்கும் என போலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் ராகேஷ் யாதவ் வீட்டில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

கட்டுகட்டாக 500 ரூபாய் நோட்டுகள்

அதன்படி உதவி போலீஸ் கமிஷனர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் ராகேஷ் யாதவ் வீட்டுக்கு செல்வதற்கு முன்பாக கிராமம் முழுவதும் முன்கூட்டியே மின் இணைப்பை துண்டித்தனர். ராகேஷ் யாதவ் வீட்டிற்கு சென்ற போலீசார் சந்தேகப்படும்படியான அறையில் பள்ளம் தோண்டினர். அப்போது பூமிக்கு அடியில் 3 பீப்பாய்களில் கட்டுகட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

கைது

கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுக்களை பறிமுதல் செய்த போலீசார், அந்த பணத்தை வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இது சம்பந்தமாக ராகேஷ் யாதவின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், குடும்ப உறுப்பினர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். ராகேஷ் யாதவின் பழத் தோட்டம் மற்றும் விவசாய நிலங்களிலும் சோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

X