மத்திய ரிசர்வ் போலீசில் இதுவரை 108 பேர் கொரோனாவால் பலி

துணை ராணுவ படைப்பிரிவுகளில் அதிகபட்ச அளவாக, மத்திய ரிசர்வ் போலீசில் இதுவரை 108 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

சுமார் 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் இதுவரை 108 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

இதுகுறித்து துணை ராணுவ படைப்பிரிவு அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரம் வருமாறு:-

மொத்தம் உள்ள 7 துணை ராணுவ படைப்பிரிவுகளில், இதுவரை 71 ஆயிரத்து 295 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. நேற்று ஒருநாளில் மட்டும் 763 புதிய தொற்றுகள் பதிவானது. 7 படைப்பிரிவுகளிலும் சேர்த்து இதுவரை 271 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக மத்திய ரிசர்வ் போலீஸ் பிரிவில் இதுவரை 20 ஆயிரத்து 700 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதில், 108 பேர் பலியாகி உள்ளனர். அதே நேரத்தில் அனைத்துப் படைப்பிரிவினருக்கும் ஏறத்தாழ 100 சதவீத அளவு முதல்கட்ட தடுப்பூசி போடப்பட்டுவிட்டது. 78.40 சதவீதம் பேருக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி போடப்பட்டுள்ளது. விரைவில் 100 சதவீதம் தடுப்பூசி பணிகள் நிறைவு பெற்றுவிடும் என்று அந்த புள்ளி விவரத்தில் இடம் பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com