காஷ்மீரில் பணியாற்றும் மத்திய ரிசர்வ் போலீசாருக்கு பிளாஸ்டிக் தோட்டாக்கள்

பெல்லட் துப்பாக்கிகளின் பயன்பாட்டை குறைக்க காஷ்மீரில் பணியாற்றும் மத்திய ரிசர்வ் போலீசாருக்கு பிளாஸ்டிக் தோட்டாக்கள் அனுப்பப்பட்டது.
காஷ்மீரில் பணியாற்றும் மத்திய ரிசர்வ் போலீசாருக்கு பிளாஸ்டிக் தோட்டாக்கள்
Published on

மீரட்,

காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பாதுகாப்பு படையினருக்கு எதிராக அவ்வப்போது பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் சில நேரங்களில் பாதுகாப்பு படையினர் மீது கல்வீச்சு போன்ற தாக்குதல்களிலும் ஈடுபடுகின்றனர்.

இந்த போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் பணிகளை மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சி.ஆர்.பி.எப்.) மேற்கொண்டு வருகின்றனர். இதில் மோதல் ஏற்படும் போது போராட்டக்காரர்கள் மீது ரப்பர் குண்டுகளால் (பெல்லட்) துப்பாக்கிச்சூடு நடத்தப்படுகிறது. இதில் பலத்த காயம் ஏற்படுவதுடன், சில நேரங்களில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இதனால் இந்த பெல்லட் துப்பாக்கிகளுக்கு பதிலாக மாற்று ஆயுதங்களை பரிசீலிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்தன.

எனவே ரப்பர் குண்டுகளுக்கு பதிலாக பிளாஸ்டிக் குண்டுகளை ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) அதிகாரிகள் வடிவமைத்து, புனேவில் உள்ள ராணுவ தளவாட தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டன. இதில் சுமார் 21 ஆயிரம் ரவுண்டு சுடுவதற்கு தேவையான பிளாஸ்டிக் குண்டுகள் காஷ்மீருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. உயிரிழப்புகளை குறைக்கும் இந்த குண்டுகளை அனைத்து விதமான ஏ.கே. ரக துப்பாக்கிகளிலும் பொருத்தி பயன்படுத்த முடியும். இது காஷ்மீரில் உள்ள அனைத்து சி.ஆர்.பி.எப். படைப்பிரிவினருக்கும் வழங்கப்படும் என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com