கச்சா எண்ணை விவகாரம்: இந்தியாவுக்கு அமெரிக்கா விலக்கு; தனிநபரின் சுரண்டலின் விளைவு - ராகுல் காந்தி

கச்சா எண்ணை விவகாரம்: இந்தியாவுக்கு அமெரிக்கா விலக்கு; தனிநபரின் சுரண்டலின் விளைவு - ராகுல் காந்தி
கச்சா எண்ணை விவகாரம்: இந்தியாவுக்கு அமெரிக்கா விலக்கு; தனிநபரின் சுரண்டலின் விளைவு - ராகுல் காந்தி
Published on

புதுடெல்லி,

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்க இந்தியாவுக்கு 30 நாட்கள் விலக்கு அமெரிக்கா அளித்துள்ளது தொடர்பாக காங்கிரஸ் கடுமையாக விமர்சித்து உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:-

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி அளித்து 30 நாட்கள் விலக்கு வழங்கி உள்ளது. இந்த உத்தரவை அமெரிக்க கருவூல மந்திரி ஸ்காட் பெசென்ட் ஒரு பதிவில் பகிர்ந்துள்ளார்.

பிரதமர் மோடியின் கீழ் உள்ள இந்திய அரசாங்கம், இந்தியா எங்கிருந்து எண்ணை வாங்கலாம், எங்கிருந்து வாங்கக்கூடாது என்பதை அமெரிக்கா தற்போது தீர்மானிக்கும் சூழ்நிலைக்கு நாட்டை இட்டுச் சென்றுள்ளது.

இந்த முடிவை பிரதமர் மோடியோ இந்த அல்லது இந்திய அரசாங்கமோ எடுக்கவில்லை. இந்தியா எண்ணை வாங்க அனுமதிக்க அமெரிக்கா யார்? என்று இன்று நாட்டின் குடிமக்கள் கேட்கிறார்கள். நாங்கள் எந்த நாட்டிற்கும் அடிமைகள் அல்ல. நாங்கள் ஒரு இறையாண்மை மற்றும் சுதந்திரமான நாடு.

ஆனால் மோடி அமெரிக்காவிடம் இந்தக் கேள்வியைக் கேட்க முடியாது. ஏனென்றால் அவர் முற்றிலும் சமரசம் செய்து, அமெரிக்க நலன்களுக்கு நாட்டை அடகு வைத்துவிட்டார்

இவ்வாறு காங்கிரஸ் தெரிவித்து உள்ளது.

அதேபோல் மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான ராகுல்காந்தி வெளியிட்ட பதிவில் கூறியதாவது:-

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை நமது மக்களின் கூட்டு விருப்பத்தில் இருந்து வெளிப்படுகிறது. அது நமது வரலாறு. நமது புவியியல், சத்தியம் மற்றும் அகிம்சையை அடிப்படையாகக் கொண்ட நமது ஆன்மீக நெறிமுறைகளில் வேரூன்ற வேண்டும். இன்று நாம் காண்பது கொள்கை அல்ல. இது ஒரு சமரசம் செய்யப்பட்ட தனிநபரின் சுரண்டலின் விளைவாகும் என்று தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com