புதிய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்திற்கு முதல் மனுவை அனுப்பும் முன்னாள் நீதிபதி கர்ணன்

புதிய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்திற்கு முதல் மனுவை முன்னாள் நீதிபதி கர்ணன் அனுப்புகிறார்.
புதிய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்திற்கு முதல் மனுவை அனுப்பும் முன்னாள் நீதிபதி கர்ணன்
Published on

புதுடெல்லி

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் கொல்கத்தா ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

இதையடுத்து தலைமறைவாக இருந்து வந்த கர்ணனை கடந்த மாதம் 20ந்தேதி கோவையில் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கொல்கத்தா அழைத்து செல்லப்பட்டு சிறையில் அடைக்கபட்டார்.

முன்னாள் நீதிபதி சி.எஸ். கர்ணன் புதிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கேவிந்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஊடக அறிக்கையின்படி, கர்ணனின் வழக்கறிஞர் மாத்யூஸ் ஜே. நெடும்பாரா கூறியதாவது:-

புதிய ஜனாதிபதி பதவி ஏற்ற சில நிமிடங்களில் அவரது அலுவலகத்திற்கு முதல் மனு நேரடியாகவும், இணைய தளம் மூலமும் சமர்பிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. என கூறினார்.

முன்னதாக, கர்ணன் மேற்கு வங்க ஆளுனர் கேசரி நாத் திரிபாதிக்கு பரேலுக்கு கேரிக்கை விடுத்து இருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com