சித்தராமையா மீது சி.டி.ரவி எம்.எல்.ஏ. தாக்கு

சித்தராமையா எப்போதும் பொய் மட்டுமே பேசுவார் என்று சி.டி.ரவி கடுமையாக தாக்கி பேசினார்.
சித்தராமையா மீது சி.டி.ரவி எம்.எல்.ஏ. தாக்கு
Published on

சிக்கமகளூரு:

சித்தராமையா எப்போதும் பொய் மட்டுமே பேசுவார் என்று சி.டி.ரவி கடுமையாக தாக்கி பேசினார்.

சிக்கமகளூருவில் சி.டி.ரவி எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்பாது அவர் கூறியதாவது:-

வாயை திறந்தால்...

சிக்கமகளூரு மருத்துவக்கல்லூரிக்கு கடந்த ஆட்சியில் வருகை தந்த போது உள்ளே செல்ல விடாமல் தடுத்தனர். தத்தா குகை சம்பவத்தில் மக்களுக்கு சித்தராமையா துரோகம் செய்துள்ளார். டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளி ஆகிய பகுதிகளில் கலவரத்தை உருவாக்கியதே சித்தராமையாதான். எஸ்.டி.பி.ஐ. மீது உள்ள வழக்குகளை திரும்ப பெற்றதும் அவர்தான்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது டெபாசிட் கூட பா.ஜனதா வாங்காது என கூறினார். ஆனால் அப்போதே 25 இடங்களில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்றது. வாயை திறந்தால் சித்தராமையா பொய் சொல்வதையே குறிக்கோளாக வைத்து கொண்டு இருக்கிறார்.

150 இடங்களில் வெற்றி

எடியூரப்பா ஆட்சியை பிடிக்க மாட்டார் என சித்தராமையா கூறி வருகிறார். நான் ஆர்.எஸ்.எஸ்.-ஐ சேர்ந்தவன். நாங்கள் எப்பொழுதும் ஆர்.எஸ்.எஸ்.க்கு மதிப்பு கொடுப்போம். வருகிற சட்டசபை தேர்தலில் 150 இடங்கள் முதல் 200 இடங்கள் வரை பிடிப்போம். பா.ஜனதா கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பது உறுதி.

காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பல்வேறு ஊழல்கள் இருக்கிறது. பரமேஸ்வரர் மற்றும் கே.எச்.முனியப்பாவை தோற்கடிக்க வைத்ததே சித்தராமையா மற்றும் அவரது தரப்பினர் தான்.

இ்வ்வாறு சி.டி.ரவி.எம்.எல்.ஏ.தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com