சி.டி.ரவி எம்.எல்.ஏ. ஆஸ்பத்திரியில் அனுமதி

சிறுநீரக பிரச்சினை காரணமாக பா.ஜனதாவின் தேசிய தலைவர் சி.டி. ரவி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
சி.டி.ரவி எம்.எல்.ஏ. ஆஸ்பத்திரியில் அனுமதி
Published on

பெங்களூரு:

பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளரான சி.டி.ரவி எம்.எல்.ஏ. மீண்டும் சிக்கமகளூரு தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் தேர்தலையொட்டி தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் 16-ந்தேதி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த நிலையில் சி.டி.ரவி நேற்று முன்தினம் இரவு திடீரென்று சிக்கமகளூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அதாவது, சிறுநீரக கோளாறு காரணமாக அவர் அவதிப்பட்டு வந்ததாகவும், அதற்காக சிகிச்சை பெற அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சிறுநீரகத்தில் 12 மில்லி மீட்டர் அளவுக்கு கல் இருப்பதாகவும், அதனை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற டாக்டர்கள் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com