சி.யூ.இ.டி. பொது நுழைவுத்தேர்வு; ஜூன் 18 வரை விண்ணப்பிக்கலாம் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

சி.யூ.இ.டி. பொது நுழைவுத்தேர்வு; ஜூன் 18 வரை விண்ணப்பிக்கலாம் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் உள்ள 42 மத்திய பல்கலைக்கழகங்களில் எம்.ஏ., எம்.காம்., எம்.பி.ஏ., எம்.எஸ்.சி. உள்ளிட்ட முதுகலை படிப்புகளில் சேர்வதற்கான சி.யூ.இ.டி.(CUET) எனப்படும் மத்திய பல்கலைகழகங்களுக்கான பொதுநுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.

அந்த வகையில் வரும் கல்வியாண்டிற்கான சி.யூ.இ.டி. பொதுநுழைவுத் தேர்வு, கணிணி முறையில் ஜூலை மாத இறுதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு வரும் ஜூன் 18 ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com