மராட்டியத்தில் ஊரடங்கு தளர்வுகள்; அனைத்து நாட்களிலும் இரவு 10 மணி வரை கடைகள் இயங்க அனுமதி

மராட்டியத்தில் ஊரடங்கு தளர்வுகளை முன்னிட்டு அனைத்து நாட்களிலும் இரவு 10 மணி வரை கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
மராட்டியத்தில் ஊரடங்கு தளர்வுகள்; அனைத்து நாட்களிலும் இரவு 10 மணி வரை கடைகள் இயங்க அனுமதி
Published on

புனே,

நாட்டில் கொரோனா பாதிப்புகளில் முதல் இடத்தில் உள்ள

மராட்டியத்தில் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு ஊரடங்கு தளர்வுகளில் மாற்றம் கொண்டு வந்து உள்ளது.

இதன்படி வருகிற 15ந்தேதி முதல் அங்கு இரவு 10 மணி வரை, அனைத்து நாட்களிலும் கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதேபோல், திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு 200 பேர் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இதுதவிர, உடற்பயிற்சி கூடங்கள், சலூன்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்கவும் அரசு அனுமதி வழங்கி உள்ளது. எனினும், அரசியல், கலாசாரம் மற்றும் மதம் சார்ந்த நிகழ்வுகளுக்கு வழக்கம்போல் அங்கு தடை தொடர்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com