பாஜகவின் தேசியவாத அறிவுரைகளுக்கு காங்கிரஸ் பதிலடி

பாஜகவின் தேசியவாத அறிவுரைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக காங்கிரஸ் புது வியூகம் வகுத்துள்ளது.
பாஜகவின் தேசியவாத அறிவுரைகளுக்கு காங்கிரஸ் பதிலடி
Published on

புதுடெல்லி

இதன்படி காங்கிரஸ்சின் உயர்மட்ட அதிகார அமைப்பான காரியக்குழு வரும் 8 ஆம் தேதி கூடி, வரலாற்று சிறப்புமிக்க வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் பவளவிழா ஆண்டினைக் கொண்டாடுவதற்கான வழிமுறைகளை ஆராயவுள்ளது.

வெள்ளையனே வெளியேறு இயக்கம் காங்கிரஸ் கட்சியின் மும்பை மாநாட்டில் 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதியன்று துவங்கப்பட்டது. இரண்டாம் உலகப் போர் தீவிரமாக நடைபெற்று வந்த போது பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை இந்தியாவை விட்டு வெளியேறும்படி கோரிய இவ்வியக்கம் கடுமையான ஒடுக்குமுறையை சந்தித்தது.

இக்கூட்டம் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் தலைமையில் கூடி இக்கொண்டாட்டங்கள் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றவுள்ளது. கட்சியின் மூத்தத் தலைவர் இது பற்றி பேசும்போது பாஜகவின் தத்துவார்த்த ஊற்றுக்கண் இயக்கமான ஆர் எஸ் எஸ் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் எவ்வித பங்கினையும் வகிக்கவில்லை. ஆனால் தற்போது அதன் தலைமை தேசியவாத உணர்வு குறித்து அறிவுரைகளை அளித்து வருகிறது என்றார்.

இயக்கம் நடந்து வந்தக் காலத்தில் காங்கிரஸ் இயக்கம் எவ்வாறு அதில் பங்களித்தது என்பதும் குறித்தும் எடுத்துரைக்கப்படும் என்றும் அத்தலைவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com