ரான்சம்வேர் வைரஸ் குஜராத் மாநில அரசு அலுவலக கம்ப்யூட்டர்களை தாக்கியது

குஜராத் மாநிலத்தில் பல்வேறு அரசு துறைகளில் உள்ள கம்ப்யூட்டர்களை ரான்சம்வேர் வைரஸ் தாக்கி உள்ளது.
ரான்சம்வேர் வைரஸ் குஜராத் மாநில அரசு அலுவலக கம்ப்யூட்டர்களை தாக்கியது
Published on

ஆமதாபாத்,

குஜராத் மாநிலத்தில் பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்கள் ரான்சம்வேர் வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு உள்ளது. மாநில ஐடி சேவைகளானது பாதிக்கப்பட்டு உள்ளது. குஜராத் மாநிலத்தில் ஆர்டிஒ அலுவலகங்கள் மற்றும் பல்வேறு மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் மற்றும் காவல் நிலையங்களில் உள்ள கம்ப்யூட்டர்கள் ரான்சம்வேர் வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு உள்ளது. கம்ப்யூட்டர்களில் ஆன்டி-வைரஸ் சிஸ்டம்களை நிறுவும் வரையில் சுவிட்-ஆப் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

கம்ப்யூட்டர்களை பயன்படுத்தும் அனைத்து துறைகளுக்கும் அம்மாநில அரசு அறிவுரையை அனுப்பி உள்ளது, அதில் கம்ப்யூட்டர்களை பயன்படுத்துவதற்கு முன்னதாக அப்கிரேட் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது,

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கையாளவும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

குஜராத் மாநில தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் தனஞ்சய் திவேதி பேசுகையில், மாநிலம் முழுவதும் 120 கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்பட்டு உள்ளது, சில போலீஸ் அலுவலகங்கள் மற்றும் அகமதாபாத் சிவில் மருத்துவமனைகள் பாதிக்கப்பட்டு உள்ளது என்றார். மாநிலத்தில் தனியார் நிறுவனங்கள் தரப்பில் ரான்சம்வேர் தாக்குதல் தொடர்பாக எந்தஒரு புகாரும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தனியார் நிறுவனங்கள் பிரச்சனையை வெளியே கூறுவதை தவிர்ப்பதை தவிர்த்து அதனை சரிசெய்ய அவர்களுடைய நெட்வோர்க்கை அப்-கிரைடு செய்ய வேண்டும் என சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com