சைபர் பயங்கரவாத தாக்குதல்; 5 மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை

குஜராத் பயங்கரவாத ஒழிப்பு படை பதிவு செய்திருந்த இந்த வழக்கின் அடிப்படையில், ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்டு விட்டனர்.
சைபர் பயங்கரவாத தாக்குதல்; 5 மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை
Published on

புதுடெல்லி

சைபர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக 5 மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனையில் ஈடுபட்டது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டபோது, குஜராத்தில் சைபர் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், இந்த விசாரணை தொடர்பாக 5 மாநிலங்களில் உள்ள 5 இடங்களில் என்.ஐ.ஏ. இன்று அதிரடியாக சோதனையில் ஈடுபட்டது. கோர்ட்டு வாரண்ட் பிறப்பித்ததன்பேரில் இன்று காலை இந்த சோதனை நடந்துள்ளது.

5 இடங்கள்

கடந்த 2025-ம் ஆண்டு ஜூன் 25-ந்தேதி பதிவு செய்யப்பட்ட வழக்கின் தொடர் விசாரணையின் அடிப்படையில், ஜுன்னார் (புனே, மராட்டியம்), நாடியாட் (கேடா, குஜராத்), ராமகுண்டம் (கரீம்நகர், தெலுங்கானா), கோபால்கஞ்ச் (பீகார்) மற்றும் டெல்லி ஆகிய 5 இடங்களில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

குஜராத் பயங்கரவாத ஒழிப்பு படை பதிவு செய்திருந்த இந்த வழக்கின் அடிப்படையில், ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்டு விட்டனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து மொத்தம் மூன்று மடிக்கணினிகள், ஐந்து மொபைல் போன்கள் மற்றும் பென் டிரைவ்கள் உள்ளிட்ட பிற டிஜிட்டல் சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

தேசிய இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் ஒற்றுமையில் சமரசம் ஏற்படுத்தும் நோக்கில், மக்களை அச்சுறுத்தும் வகையில், முக்கிய கணினி தகவல்களையும், முக்கிய தகவல் உட்கட்டமைப்புகள் மற்றும் வலைத்தளங்கள் என மத்திய அரசின் 54 முக்கிய அமைப்புகள் இந்த சைபர் தாக்குதலில் இலக்காக கொள்ளப்பட்டு உள்ளன என என்.ஐ.ஏ. தெரிவித்து உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com