‘சைபர் கிரிமினல்களை தனிமைச் சிறையில் அடைக்க வேண்டும்’ - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆவேசம்

கொலை குற்றவாளிகளைக் கூட சீர்திருத்தி விடுவிக்க வாய்ப்புள்ளது என நீதிபதி தெரிவித்தார்.
‘சைபர் கிரிமினல்களை தனிமைச் சிறையில் அடைக்க வேண்டும்’ - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆவேசம்
Published on

புதுடெல்லி,

உத்தர பிரதேசத்தில் பகுதி நேர வேலைவாய்ப்பு தருவதாக கூறி சுமார் 6 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் சூரஜ் ஸ்ரீவஸ்தவ், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி தாக்கல் செய்த மனு இன்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், “கொலை குற்றவாளிகளைக் கூட சீர்திருத்தி விடுவிக்க வாய்ப்புள்ளது. ஆனால் இதுபோன்ற சைபர் கிரிமினல்களை செல்போன் உள்ளிட்ட உபகரணங்களை பயன்படுத்த முடியாதபடி தனிமைச் சிறையில் அடைப்பதே சரியான தீர்வாக இருக்கும்” என்று தெரிவித்தார். அதோடு, ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com