சைக்கிள் ஓட்டுவதை வாழ்வின் அங்கமாக மாற்ற வேண்டும்- மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்

சைக்கிள் ஓட்டுவதை வாழ்வின் அங்கமாக மாற்ற வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா தெரிவித்தார்.
சைக்கிள் ஓட்டுவதை வாழ்வின் அங்கமாக மாற்ற வேண்டும்- மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்
Published on

புதுடெல்லி,

பூமியை காப்போம், வாழ்வை காப்போம் என்ற தலைப்பில் சைக்லத்தான் போட்டிக்கு தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. டெல்லியில் இந்த போட்டியை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார். சமூக ஆர்வலர்கள் உள்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய மத்திய மந்திரி கூறியுள்ளதாவது: மக்கள் தங்கள் உடல் நலம் மற்றும் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டும்.

காற்று மாசுப்பாட்டை ஏற்படுத்தாத வாகனம் சைக்கிள். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும் அது முக்கியப் பங்காற்றுகிறது. பல்வேறு உலக நாடுகள் சைக்கிளை அதிக அளவில் பயன்படுத்துகின்றன. இந்தியாவில் ஏழையின் வாகனமாக சைக்கிள் கருதப்படுகிறது.

வசதி படைத்தவர்களும் சைக்கிளை பயன்படுத்த வேண்டும். நமது வாழக்கையில் சைக்கிள் ஓட்டுவதை ஒரு அங்கமாக மாற்றி பசுமை பூமியை உருவாக்க வேண்டும். உடற்பயிற்சிகள் மூலம் பல்வேறு நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளமுடியும். இதனால் உடல் ஆரோக்கியம் பெறுவதுடன், மன வலிமையும் பெற முடியும் என்பதை நாம் அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com