

புதுடெல்லி,
தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, வலுப்பெற்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு கஜா என்று பெயரிடப்பட்டுள்ளது. கஜா புயலானது குறைந்த வேகத்தில் நகர்வதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- வங்க கடலில் உருவாகியுள்ள கஜா புயல் மணிக்கு 5 கி.மீட்டர் வேகத்தில் நகர்கிறது. அதி தீவிர புயலாக அடுத்த 24 மணி நேரத்தில் கஜா புயல் வலுப்பெறும்.
சென்னைக்கு கிழக்கே 750 கி.மீட்டர் தொலைவிலும் நாகைக்கு வடகிழக்கே 840 கி.மீட்டர் தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. தெற்கு தென்மேற்கு நோக்கி நகரும் கஜா புயல் பாம்பன் - கடலூர் இடையே நவம்பர் 15-ல் கடக்க வாய்ப்பு உள்ளது. நவம்பர் 15-ல் வட தமிழகம், தென் கடலோர மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.