முரசு புயல்; விஜயவாடாவுக்கான 8 இண்டிகோ விமானங்களின் சேவை நாளை ரத்து

இவற்றில் டெல்லி, பெங்களூரு, ஐதராபாத், சென்னை, கடப்பா ஆகிய நகரங்களுக்கான மற்றும் சிங்கப்பூர் நாட்டிற்கான விமான சேவை நாளை ரத்து செய்யப்படுகிறது.

முரசு புயல்; விஜயவாடாவுக்கான 8 இண்டிகோ விமானங்களின் சேவை நாளை ரத்து
Published on: 

விஜயவாடா

முரசு புயல் எதிரொலியாக விஜயவாடாவுக்கான 8 விமானங்களின் சேவையை இண்டிகோ நிறுவனம் நாளை ரத்து செய்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள 'முரசு' என்று பெயரிடப்பட்டுள்ள புயல் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை தீவிரப்புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

கனமழை எச்சரிக்கை

புயலை முன்னிட்டு, கனமழை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இதனால், அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், பயணிகளின் பாதுகாப்பை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விஜயவாடாவில் இருந்து நாட்டின் முக்கிய பகுதிகளுக்கு செல்லும் விமானங்களின் சேவையை இண்டிகோ நிறுவனம் நாளை ரத்து செய்துள்ளது.

விமானங்கள் ரத்து

இதன்படி, 7 உள்நாட்டு விமானங்கள், ஒரு சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவற்றில் டெல்லி, பெங்களூரு, ஐதராபாத், சென்னை, கடப்பா ஆகிய நகரங்களுக்கான மற்றும் சிங்கப்பூர் நாட்டிற்கான விமான சேவை நாளை ரத்து செய்யப்படுகிறது.

இதனால், பயணிகள் நாளை விமான நிலையத்திற்கு செல்லும் முன் விமான நிறுவனத்தின் சேவை பற்றிய தகவல்களை முன்பே அறிந்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

X