

திருவனந்தபுரம்,
வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஒகி புயல் காரணமாக தென் தமிழம், கேரளாவில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. கேரளா மற்றும் தமிழகத்தில் இருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணியில் விமானப்படை, கடற்படை மற்றும் கடலோர காவல்படை தீவிரமாக இறங்கி உள்ளது.
இந்த நிலையில், ஐ.என்.எஸ். கல்பேனி கப்பல் உதவியுடன் கடலில் இருந்த 13 மீனவர்கள் மீட்கப்பட்டு கொல்லம் நகர அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர்.
இதேபோன்று விமான படை ஹெலிகாப்டர் உதவியுடன் காயம்குளம் மேற்கே 30 மைல்கள் தொலைவில் 4 மீனவர்கள் மீட்கப்பட்டு உள்ளனர். அவர்கள் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
அடுத்த 12 மணிநேரத்தில் வட லட்சத்தீவு பகுதிகளில் பலத்த மழை பெய்ய கூடும் என தகவல் தெரிவிக்கின்றது.