‘ஒகி‘ புயல் கேரள மீனவர்கள் எச்சரிக்கையை மீறி மாயமான மீனவர்களை தேடும் பணியில் இறங்கினர்

ஒகி புயல் காரணமாக மாயமான மீனவர்களை தேடும் பணியில் கேரள மாநில மீனவர்கள் எச்சரிக்கையை மீறி இறங்கி உள்ளனர்.
‘ஒகி‘ புயல் கேரள மீனவர்கள் எச்சரிக்கையை மீறி மாயமான மீனவர்களை தேடும் பணியில் இறங்கினர்
Published on

திருவனந்தபுரம்,

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஒகி புயல் காரணமாக தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் கேரளாவின் கடலோர மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது. ஒகி புயல் காரணமாக கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், பத்தனம்திட்டை மற்றும் ஆலப்புழை மாவட்டங்களில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. ஒகி புயல் தென் கேரளாவிலும் பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே கேரளா மற்றும் தமிழகத்தில் இருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் மாயமாகினர். அவர்களை தேடும் பணியில் விமானப்படை, கடற்படை மற்றும் கடலோர காவல்படை தீவிரமாக இறங்கி உள்ளது.

கடல் பகுதியில் ஆங்காங்கே சிக்கித்தவிக்கும் மீனவர்களை கடற்படை விமானப்படை உதவியுடன் மீட்டு வருகிறது, மீனவர்களுக்கு தேவையான வசதிகள் செய்துக் கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இரு மாநிலங்களிலும் புயலுக்கு பின்பு அந்த மீனவர்கள் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. இதனால் மீனவர்களின் குடும்பத்தினரும், உறவினர்களும் கவலை அடைந்துள்ளனர். அவர்கள் தரப்பில் மத்திய-மாநில அரசுகள் விரைந்து செயல்பட்டு மாயமான மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது. போராட்டமும் நடைபெற்று வருகிறது.

கேரள கடற்கரைப் பகுதியில் இரண்டு மீனவர்கள் சடலம் எடுக்கப்பட்டு உள்ளது, அங்கு ஒகி புயல் காரணமாக நேரிட்ட உயிரிழப்பு 16 ஆக அதிகரித்து உள்ளது.

மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டும் என மாநில அரசு மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. அதனை மீறி கோபம் அடைந்த கேரள மாநில மீனவர்கள் தங்களுடைய படகுகளை எடுத்துக் கொண்டு மாயமான மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். சுமார் 40 படகுகளில் மீனவர்கள் இன்று ஞாயிறு காலை தேடும் பணியை தொடங்கி உள்ளனர் என தெரியவந்து உள்ளது. மாயமான மீனவர்களை மீட்க சென்ற மீனவர்கள் கடலில் மிதந்த மீனவரின் உடலை கரைக்கு கொண்டு வந்து உள்ளது. இந்திய விமானப்படை மற்றும் கடற்படையும் மீட்பு பணியை தொடர்ந்து செய்து வருகிறது.

கேரளாவில் இன்னும் 100-க்கும் மேற்பட்ட மீனவர்களை காணவில்லை என மீன கிராம மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com