வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைப்பு

19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் ரூ 1,999.50 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்தது.
கோப்பு படம் (பிடிஐ)
கோப்பு படம் (பிடிஐ)
Published on

புதுடெல்லி,

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.57 குறைந்துள்ளது. 1,999.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.57 குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இதன் மூலம் ஒரு சிலிண்டரின் விலை ரூ.1,942 - ஆக குறைந்துள்ளது. கடந்த இரு மாதங்களாக வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை அதிகரித்து வந்த நிலையில், இன்று சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது வணிகர்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com