ராணுவ மந்திரி தலைமையில் நடந்த கூட்டத்தில் ரூ.3,000 கோடி மதிப்பிலான போர் கருவிகளை வாங்க ஒப்புதல்

ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த ராணுவ கொள்முதல் குழு கூட்டத்தில் ரூ.3 ஆயிரம் கோடி அளவிற்கு போர் கருவிகளை வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
ராணுவ மந்திரி தலைமையில் நடந்த கூட்டத்தில் ரூ.3,000 கோடி மதிப்பிலான போர் கருவிகளை வாங்க ஒப்புதல்
Published on

புதுடெல்லி,

இந்திய ராணுவத்திற்கு போர் கருவிகளை கொள்முதல் செய்வதற்காக மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று ராணுவ கொள்முதல் குழு கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில், இந்திய கப்பற்படையிலுள்ள 2 கப்பல்களுக்காக பிரம்மோஸ் ஏவுகணைகள் வாங்குவது மற்றும் இந்திய ராணுவத்தின் அர்ஜுன் பீரங்கிக்கான மீட்பு வாகனங்களை வாங்குவது உள்ளிட்ட ஆயுதங்களை வாங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த பிரம்மோஸ் ஏவுகணைகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சூப்பர்சோனிக் வகையை சேர்ந்தவை. இவை கப்பல்களில் முதன்மை ஆயுதங்களாக சேர்க்கப்படும்.

இதேபோன்று மீட்பு வாகனங்கள் மத்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகத்தினால் வடிவமைக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டவை ஆகும். இவை போர் காலங்களில் மிக திறமையுடன் மற்றும் வேகமுடன் சேதமடைந்த பீரங்கிகளை சரிசெய்வது மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட உதவும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com