இந்தியாவில் 12 மாநிலங்களில் தினமும் கொரோனா அதிகரிப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

நாட்டில் தற்போது மொத்தம் 12 மாநிலங்களில் தினமும் தொற்று ஏறுமுகத்தில் செல்வதாக மத்திய சுகாதார அமைச்சக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
இந்தியாவில் 12 மாநிலங்களில் தினமும் கொரோனா அதிகரிப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே போகிறது. கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு உத்திகளை பின்பற்றி வருகின்றன. ஆனாலும் பாதிப்பு அடங்காமல் நீடிக்கிறது. நேற்று ஒரே நாளில் 3 லட்சத்து 46 ஆயிரத்து 786 பேர் கொரோனா பிடியில் சிக்கினர்.

இவர்களில் பெரும்பான்மையினர் (74.15 சதவீதத்தினர்) மராட்டியம், உத்தரபிரதேசம், டெல்லி, கர்நாடகம், கேரளா, சத்தீஷ்கார், மத்திய பிரதேசம், தமிழகம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய 10 மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இந்த 10 மாநிலங்கள் தொடர்ந்து கொரோனாவின் பிடியில் நீடிக்கின்றன.

அதே சமயம் நாட்டில் தற்போது மொத்தம் 12 மாநிலங்களில் தினமும் தொற்று ஏறுமுகத்தில் செல்வதாக மத்திய சுகாதார அமைச்சக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. அந்த மாநிலங்கள் மராட்டியம், உத்தரபிரதேசம், டெல்லி, கர்நாடகம், சத்தீஷ்கார், மத்திய பிரதேசம், கேரளா, குஜராத், தமிழகம், ராஜஸ்தான், பீகார், மேற்கு வங்காளம் ஆகும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com