கோலார் தங்கவயலில் புதிய நடைபாதை அமைப்பு


கோலார் தங்கவயலில் புதிய நடைபாதை அமைப்பு
x

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி காரணமாக புதிய நடைபாதை அமைக்கப்பட்டது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் நகரசபைக்கு உட்பட்ட ஆண்டர்சன்பேட்டை சர்க்கிள் முதல் சாம்பியன்ரீப் ரெயில் நிலையம் வரை செல்லும் சாலையில் குண்டும், குழியுமாக இருந்தது. மேலும், அப்பகுதியில் நடைபாதை சாலை இல்லாமல் வியாபாரிகள் அவதி அடைந்து வந்தனர். இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டுனர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது.

எனவே புதிய நடைபாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் நகரசபை நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். மேலும், இதுதொடர்பான 'தினத்தந்தி' நாளிதழில் கடந்த 13ம் தேதி செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

தினத்தந்தி செய்தி எதிரொலி காரணமாக தற்போது புதிய நடைபாதை சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு 'தினத்தந்தி' நாளிதழ், நகரசபை நிர்வாகத்திற்கு பொதுமக்கள், வியாபாரிகள் நன்றி தெரிவித்தனர்.

1 More update

Next Story