

சாகர்
மத்திய பிரதேசத்தில் சாகர் மாவட்டத்தில் ரென்வ்ஜா கிராமத்தில் 35 வயதான தலித் பெண்ணின் மூக்கு அறுக்கப்பட்டு , அவரது கணவரும் தாக்கப்பட்டார்.
நரேந்திர சிங் (வயது 35) மற்றும் அவரது தந்தை சாஹப் சிங் ஆகியோர், அந்த பெண் அவர்கள் வீட்டில் சில வேலைகளை செய்யவில்லை என்று அந்த பெண்ணின் கணவரை அடித்து தாக்கி உள்ளனர்.
மேலும் அந்த பெண் தனது கணவரை மருத்துவமனைக்கு கெண்டு வந்தபேது, நரேந்திரா மற்றும் சாஹப் ஆகியேரும் அந்த பெண்ணை தாக்கினர் அந்தபெண்ணின் மூக்கை அறுத்து உள்ளனர்.
மத்தியப் பிரதேச மகளிர் ஆணையம் (MPWC) தலைவர் லதா வாங்கிடி அந்த பெண்ணின் மூக்கு வெட்டப்பட்டது என்று கூறினார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் பாக்ரி சிங் , மூக்குக்கு காயம் அடைந்ததாகவும், மருத்துவ அறிக்கைக்காக காவல்துறையினர் காத்துக்கெண்டிருப்பதாகவும் கூறினார். இந்த சம்பவம் வியாழக்கிழமை வெளிச்சத்துக்கு வந்தது.