சாலையின் நடுவே மின்கம்பம்... வாகன ஓட்டிகள் அதிர்ச்சி - வைரல் வீடியோ

இதுகுறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
சாலையின் நடுவே மின்கம்பம்... வாகன ஓட்டிகள் அதிர்ச்சி - வைரல் வீடியோ
Published on

லக்னோ,

உத்திரபிரதேச மாநிலத்தில் ஆபத்தை விளைவிக்கும் விதமாக சாலையின் நடுவே மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வாகனங்கள் இந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகும் அபாயம் இருப்பதால், உடனடியாக அகற்ற கோரி பொது மக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) விளக்கம் அளித்துள்ளது. மின்கம்பத்தை மாற்றுவதற்கான நிலம் உடனடியாக கிடைக்காததால், அதை அகற்ற முடியவில்லை என தெரிவித்துள்ளது.

மேலும், நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், தேவையான நிலம் கிடைத்தவுடன் மின்கம்பம் மாற்றப்படும் என்றும் லக்னோ பிராந்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com