வருகிற 9-ந் தேதி டென்மார்க் பிரதமர் இந்தியா வருகிறார்

டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் வருகிற 9-ந் தேதி இந்தியா வர உள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

டென்மார்க் நாட்டின் பிரதமர் எச்.இ.மெட்டே பிரடெரிக்சன் வருகிற 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை 3 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அவர் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து இருநாட்டு உறவுகள் பற்றி பேச உள்ளார். இந்தியாவும், டென்மார்க்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பசுமை யுக்தி கூட்டுறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளன. அதுபற்றியும், இருநாடுகளுக்கும் இடையே உள்ள பல்வேறு விஷயங்கள் பற்றியும் விவாதிக்கப்பட உள்ளன. டென்மார்க்கில் 60-க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்களும், இந்தியாவில் 200-க்கும் மேற்பட்ட டென்மார்க் நிறுவனங்களும் இருக்கின்றன என்றும், தொழில்நுட்பங்கள், விவசாயம், கப்பல் போக்குவரத்து போன்ற துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே வலுவான ஒத்துழைப்பு இருப்பதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம், தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com