சென்னகேசவா கோவிலில் கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் சாமி தரிசனம்

சென்னகேசவா கோவிலில் கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் சாமி தரிசனம் செய்தார்.
சென்னகேசவா கோவிலில் கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் சாமி தரிசனம்
Published on

ஹாசன்: கர்நாடக கவர்னராக இருப்பவர் தாவர்சந்த் கெலாட். இவர் இன்று சிவமொக்காவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு திரும்பும்போது ஹாசன் மாவட்டத்துக்கு வந்தார். அப்போது அவர், பேளூரில் உள்ள புகழ்பெற்ற சென்னகேசவா கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் சய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னகேசவா கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு கோவிலில் உள்ள கற் சிற்பங்களை பார்த்து ரசித்தார்.

இதையடுத்து அவர் அலேபீடு பகுதியில் உள்ள ஒய்சாலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து கவர்னர் கெலாட், அங்கிருந்து காரில் பெங்களூருவுக்கு புறப்பட்டு சென்றார். கவர்னர் வருகையையொட்டி பேளூர் சென்னகேசவா கோவில், அலேபீடு ஒய்சாலேஸ்வரர் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com