அடுத்த ஆண்டு ஹஜ் யாத்திரை செல்வோருக்கான தேதி அறிவிப்பு

அடுத்த ஆண்டு ஹஜ் யாத்திரை செல்வோருக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் இருந்து ஹஜ் பயணத்துக்கு இந்தமுறை பலர் பதிவு செய்து உள்ளனர். அதில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 5,870 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் அடுத்த ஆண்டு (2026) மே மாதம் 17-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை சவுதி அரேபியா ஏர்லைன்ஸ் மூலம் சென்னையில் இருந்து ஜித்தாவுக்கு நேரடியாக ஹஜ் பயணம் செல்லலாம் என்று சவுதி அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
அதேபோன்று மறுமார்க்கமாக மதினாவில் இருந்து சென்னைக்கு நேரடியாக ஜூன் 5-ந் தேதியில் இருந்து 8-ந் தேதி வரை பயணம் மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story






