வீடியோ எடுத்து ஓட்டல் உரிமையாளரை மிரட்டிய மாடல் அழகி கால்வாயில் சடலமாக மீட்பு

கடந்த 2-ம் தேதி குருகிராமில் உள்ள ஓட்டல் ஒன்றில் திவ்யா பகுஜா கொல்லப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
வீடியோ எடுத்து ஓட்டல் உரிமையாளரை மிரட்டிய மாடல் அழகி கால்வாயில் சடலமாக மீட்பு
Published on

சண்டிகார்,

பஞ்சாப் மாநிலம் குருகிராமில் உள்ள ஓட்டல் உரிமையாளரான அபிஜீத் சிங் என்பவருக்கும் முன்னாள் மாடல் அழகி திவ்யா பகுஜாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, இருவரும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர். இதற்கிடையில், மாடல் அழகி திவ்யா பகுஜா, அபிஜீத் சிங்குடன் தனிமையில் இருந்ததை வீடியோவாக பதிவுசெய்து, அதை வைத்து அபிஜீத் சிங்கை மிரட்டத் தொடங்கியிருக்கிறார்.

இதனால், இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 2-ம் தேதி குருகிராமில் உள்ள ஓட்டல் ஒன்றில் திவ்யா பகுஜா கொல்லப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், பஞ்சாபில் உள்ள பதேஹாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு கால்வாயில் திவ்யா பகுஜா சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் , இந்தக் கொலை வழக்கு தொடர்பாக அபிஜீத் சிங், ஹேம்ராஜ், ஓம் பிரகாஷ், மேகா போகத், பால்ராஜ் கில் ஆகியோரை போலீஸ் கைது செய்தது. மற்றொரு குற்றம்சாட்டப்பட்டவரான ரவி பங்கா தலைமறைவாக இருக்கிறார். இது தொடர்பாக போலீசார் கூறுகையில், கொலைசெய்யப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம், உடலை எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்பட்ட வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. தலைமறைவாக இருக்கும் ரவி பங்காவையும் தேடிவருகிறோம்" என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com