'உயிரிழந்தவர்'... வேகத்தடையால் உயிர் பிழைத்த அதிசயம்

மராட்டியத்தில் உயிரிழந்து விட்டார் என டாக்டர்கள் கூறிய நபரை ஏற்றி சென்ற ஆம்புலன்ஸ் வேகத்தடை ஒன்றில் ஏறி, இறங்கியபோது அவருடைய விரல்கள் அசைந்துள்ளன.
'உயிரிழந்தவர்'... வேகத்தடையால் உயிர் பிழைத்த அதிசயம்
Published on

கோலாப்பூர்,

மராட்டியத்தின் கோலாப்பூர் மாவட்டத்தில் கசாபா-பவடா பகுதியை சேர்ந்தவர் பாண்டுரங் உல்பே (வயது 65). கடந்த டிசம்பர் 16-ந்தேதி இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. அவரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால், அவர் உயிரிழந்து விட்டார் என டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். இதனால், உல்பேவின் குடும்பத்தினர் சோகமடைந்தனர். இதன்பின்னர், அவருடைய உடலை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டனர்.

வீட்டில் இறுதி சடங்குகள் தயாராகி கொண்டிருந்தன. வரும் வழியில் வேகத்தடை ஒன்றில் ஆம்புலன்ஸ் ஏறி இறங்கியது. இதனால், உல்பேவின் விரல்கள் அசைந்துள்ளன. இதனை மனைவி மற்றும் குடும்பத்தினர் கவனித்துள்ளனர். அவருக்கு உயிர் இருக்கிறது என நம்பினர்.

இதனை தொடர்ந்து வேறொரு மருத்துவமனைக்கு உல்பேவை கொண்டு சென்றனர். அவர் 2 வாரம் வரை மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதில், அவர் குணமடைந்து உடல்நலம் தேறியுள்ளார்.

சிகிச்சை முடிந்து உல்பே கடந்த திங்கட்கிழமை, அவருடைய வீட்டுக்கு நடந்தே சென்றுள்ளார். வேகத்தடை வழியே ஆம்புலன்ஸ் சென்றதில், உல்பே உயிர் பிழைத்து இன்று குடும்பத்தினருடன் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com