மகளிடம் அத்துமீறிய தந்தை...! திருமணம் செய்து கொடுத்தும் விடவில்லை...! கணவர் என்ன செய்தார் தெரியுமா...?

கணவரின் ஆதரவுடன், அந்த பெண் வெஜல்பூர் காவல் நிலையத்தில் பலாத்கார புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் குற்றச்சாட்டுக்கு உள்ளான தந்தையை கைது செய்தனர்.
மகளிடம் அத்துமீறிய தந்தை...! திருமணம் செய்து கொடுத்தும் விடவில்லை...! கணவர் என்ன செய்தார் தெரியுமா...?
Published on

ஆமதாபாத்,

குஜராத் மாநிலம் ஆமதாபாத் மாவட்டத்தில் உள்ள கோம்திபூரில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர்.  இவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஜுஹாபுராவில் அவர்களது சாதி வழக்கப்படி திருமணம் நடந்தது. அதன் பின் அவர்களின் மண வாழ்க்கை எல்லோரையும் போல் நன்றாகவே சென்று கொண்டிருந்தது.

இந்த நிலையில் தனது சொந்த தந்தை தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் ஒரு திடுக்கிடும் குற்றச்சாட்டை எழுப்பினார். திருமணத்திற்கு முன்னரும், பின்னரும் இது போன்ற அருவருக்கத்தக்க செயலில் அந்த பெண்ணின் தந்தை ஈடுபட்டு வந்ததாக அவர் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.

இதையடுத்து, மனைவிக்கு ஆறுதல் கூறிய கணவர் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும் அவரது மனைவியை ஊக்குவித்தார். இதை தொடர்ந்து கணவரின் ஆதரவுடன், அந்த பெண் வெஜல்பூர் காவல் நிலையத்தில் பலாத்கார புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் குற்றச்சாட்டுக்கு உள்ளான தந்தையை கைது செய்தனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறியதாவது:-

நான் ஆங்கில மீடியத்தில் படித்து கொண்டிருந்தேன். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின் 11 ஆம் வகுப்பில் அறிவியலை பாடமாக எடுத்து படித்து கணினி பொறியியலாளராக விரும்பினேன். ஆனால் குடும்பத்தின் நிதிநிலையை சுட்டிக்காட்டி அதற்கு எனது தந்தை ஒத்துக்கொள்ளவில்லை. இதை எதிர்த்து நான் அவரிடம் வாக்குவாதம் செய்ததால் என்னை வீட்டை விட்டு வெளியேற்றிவிடுவதாக மிரட்டினார்.

இந்நிலையில், ஒருமுறை என் அம்மாவும் சகோதரியும் கோடை விடுமுறைக்கு என் மூத்த சகோதரியை ராஜஸ்தானுக்கு அழைத்து சென்றனர். நான் என் தந்தையுடன் வீட்டில் தனியாக இருந்தேன். அன்று இரவு அவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்."

இதைப்பற்றி நான் யாரிடமாவது சொன்னால் என்னை வீட்டை விட்டு விரட்டிவிடுவதாக அவர் என்னை மிரட்டினார். மேலும் எனது தங்கையையும் பலாத்காரம் செய்ய போவதாகவும் மிரட்டினார்.

இதனால் நான் மிகவும் பயந்துவிட்டேன். எனது பயம் அவருக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தியது. என் அம்மா, சகோதரி வீட்டை விட்டு வெளியேறிய போதெல்லாம் அவர் என்னை பல முறை பலாத்காரம் செய்தார்.

இதனால் மனரீதியாக எனக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து எனது உடல்நிலையிலும் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சில மருந்துகளை இரவில் எடுத்துக்கொள்ள என்னை அவர் வற்புறுத்தினார். பின்னர் நான் தூங்கிய பிறகு எனது தந்தை என்னை மீண்டும் பலாத்காரம் செய்தார்.

இது போன்ற ஒரு மோசமான சூழ்நிலையில் எனக்கு திருமணம் நடந்தது. ஆனால் அதன் பின்னரும் என் தந்தை என்னை விடவில்லை. அடிக்கடி என் வீட்டுக்கு வந்து என்னை எனது தாய் வீட்டிற்கு அழைத்து செல்வார். என் கணவர் மிகவும் நல்ல மனிதர். எனது தந்தையுடன் செல்லுமாறு எனக்கு அறிவுரை கூறுவார். தந்தை என்ன சொல்கிறாரோ அதற்கு மதிப்பளிக்க வேண்டும் என எனக்கு புத்திமதி கூறுவார்.

ஆனால் ஒரு நாள், என் தந்தை எல்லா எல்லைகளையும் தாண்டிவிட்டார்."

ஒருமுறை என் தந்தை எனது வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லை. அந்த சூழ்நிலையை பயன்படுத்தி கொண்டு 'என்னுடன் உடல் உறவு கொள்ள வேண்டும்' என்று வற்புறுத்தினார். ஆனால் நான் மறுத்துவிட்டேன். இதனால் வாக்குவாதம் ஏற்பட்ட போது, எனது தந்தை அன்னை அடிக்க ஆரம்பித்தார்.

என் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர் என் மைத்துனிக்கு தகவல் கொடுத்தார். இதை தொடர்ந்து எனது தந்தை யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் அங்கிருந்து வெளியேறிவிட்டார்.

தற்போது கடந்த காலத்தில் நேர்ந்த மோசமான நிகழ்வுகளை மறந்துவிட்டு புதிய வாழ்க்கையை ஆரம்பித்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com