ஆந்திராவில் படகு கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு

ஆந்திராவில் படகு கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 34 ஆக உயர்ந்தது.
ஆந்திராவில் படகு கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு
Published on

அமராவதி,

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கோதாவரி ஆற்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை படகு கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆற்றில் மூழ்கி 12 பேர் உயிரிழந்தனர். மற்றவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப்படையினரும், மும்பை மற்றும் சத்தீஷ்காரில் இருந்து வந்த நீரில் மூழ்கியவர்களை மீட்கும் நிபுணர்களும் ஈடுபட்டனர்.

தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வந்தநிலையில் நேற்றுமுன்தினம் வரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக இருந்தது. இந்தநிலையில் நேற்று மேலும் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதன்மூலம் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 13 பேரின் உடல்கள் கிடைக்கவில்லை. அவற்றை தேடும்பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com