இந்து மடாதிபதி மரணம்: குற்றவாளிகள் தப்ப முடியாது; முதல்-மந்திரி பேட்டி

உத்தர பிரதேசத்தில் இந்து மடாதிபதி மரண விவகாரத்தில் குற்றவாளிகள் தப்ப முடியாது என முதல்-மந்திரி அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
இந்து மடாதிபதி மரணம்: குற்றவாளிகள் தப்ப முடியாது; முதல்-மந்திரி பேட்டி
Published on

பிரயாக்ராஜ்,

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள பாகம்பரி மடத்தில் அகில பாரதிய அகாரா பரிஷித் மடத்தின் தலைவர் மகந்த் நரேந்திர கிரி தூக்கில் தொங்கியபடி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

இதுபற்றிய காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது இல்லத்தில் கைப்பற்றப்பட்ட கடிதங்களில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், நரேந்திர கிரியின் உடலுக்கு உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த சம்பவத்தில் பல்வேறு சான்றுகள் கிடைத்து உள்ளன. டி.ஐ.ஜி. தலைமையிலான மூத்த போலீசார் அடங்கிய குழு ஒன்று இந்த வழக்கை விசாரித்து வருகிறது. குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com