தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் இருந்தும் பட்டினியால் மக்கள் இறப்பது கவலைக்குரியது - சுப்ரீம் கோர்ட்டு

தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் இருந்தும் பட்டினியால் மக்கள் இறப்பது கவலைக்குரியது என்று சுப்ரீம் கோர்ட்டு வேதனை தெரிவித்துள்ளது.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் இருந்தும் பட்டினியால் மக்கள் இறப்பது கவலைக்குரியது - சுப்ரீம் கோர்ட்டு
Published on

புதுடெல்லி,

புலம்பெயர் தொழிலாளர்கள் நலன் தொடர்பாக தானாக முன்வந்து பதிவு செய்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

அதன்படி நேற்று நடைபெற்ற விசாரணையின்போது நீதிபதிகள், நல்ல அரசுகளை கொண்ட நமது நாட்டில் முக்கிய வர்க்கத்தினராக உள்ள உழவர்களுக்கும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் அனைத்து உதவிகளும் கிடைக்க வேண்டும். ஆனால் சில மாநில அரசுகள் அனைத்து உதவிகளையும் செய்வதில்லை. தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் இருந்தும் மக்கள் பட்டினியால் இறப்பது கவலைக்குரியது.

பட்டினியால் யாரும் இறக்கக்கூடாது. மானிய விலையில் உணவுப்பொருட்கள் வழங்க புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com