

மீரட்,
உத்தரபிரதேசத்தில் கப்பல் அதிகாரியை கொலை செய்து, உடலை துண்டு துண்டாக்கி நீல நிற டிரம்மில் அடைத்து வைத்த மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனுக்கு தூக் குத்தண்டனை விதித்து மீரட் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
உத்தரபிரதேசத்தின் மீரட்டை சேர்ந்தவர் சவுராப் ராஜ்புத். வணிகக்கப்பல் அதிகாரியான இவருக்கு முஸ்கான் ரஸ்தோகி என்ற மனைவி இருந்தார். முஸ்கான் ரஸ்தோகி, சகில் சுக்லா என்பவருடன் கள்ளக்காதலில் இருந்துள்ளார். இதற்கு சவுராப் ராஜ்புத் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த முஸ்கான், தனது கள்ளக்காதலனுடன் இணைந்து கணவரை கொலை செய்ய திட்டமிட்டார்.
அதன்படி கடந்த ஆண்டு மார்ச் 3-ந்தேதி முஸ்கான், சகில் சுக்லா இருவரும் சேர்ந்து சவுராப் ராஜ்புத்தை கொலை செய் தனர். பின்னர் அவரது உடலை துண்டு துண்டாக வெட்டிய அவர்கள், அவற்றை நீல நிற டிரம் ஒன்றில் அடைத்தனர். அத்துடன் சிமெண்டு போட்டு மூடினர். பின்னர் இருவரும் தலைமறைவாகினர். உத்தரபிரதேசத்தை உலுக்கிய இந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை கிளப்பி இருந்தது.
இந்த விவகாரத்தில் முஸ்கான் மற்றும் சகில் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு மீரட் மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. 13 மாதங்கள் நடந்த இந்த விசாரணை கடந்த மாதம் நிறைவடைந்தது. இதில் கடந்த 30-ந்தேதி தீர்ப்பு வழங்கிய நீதிபதி, கப்பல் அதிகாரி சவுராவ் ராஜ்புத் கொலை வழக்கில், அவரது மனைவி முஸ்கான் ரஸ்தோகி, அவரது கள்ளக்காதலன் சகில் சுக்லா இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார்.
பின்னர் இருவருக்குமான தண்டனை குறித்த விவாதங்கள் நடந்தது. அவை நிறைவடைந்த நிலையில், நேற்று தண்டனை விவரங்களை நீதிபதி அரவிந்த் குமார் மிஸ்ரா அறிவித்தார். அதன்படி கணவனை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி டிரம்மில் அடைத்த முஸ்கான் மற்றும் அவரது கள்ளக்காதலன் சகில் ஆகிய இருவருக்கும் தூக்குத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் தண்டனை விவரம் அறிவதற்காக முஸ்கான், சகில் இருவரையும் போலீசார் காணொலி மூலம் ஆஜர்படுத்தினர். முன்னதாக இந்த வழக்கில் 22 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு இருந்தனர். கப்பல் அதிகாரிய கொலை செய்து உடலை துண்டு துண் டாக வெட்டி டிரம்மில் அடைத்த மனைவி மற்றும் கள்ளக்காத லனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட விவகாரம் உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.