

புதுடெல்லி,
இந்தியாவில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 4 ஆயிரத்து 529 பேர் பலியாகி உள்ளனர். இது முந்தைய நாளை விட அதிகம்.
இதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில், தடுப்பூசிகள் எண்ணிக்கை குறைந்து கொண்டிருக்கிறது. ஆனால், கொரோனா மரணங்கள் அதிகாத்துக் கொண்டிருக்கிறது. கவனத்தை திசைதிருப்புதல், பொய்யை பரப்புதல், உண்மையை மறைக்க கூச்சலிடுதல் ஆகியவைதான் மத்திய அரசின் கொள்கை என்று அவர் கூறியுள்ளார்.