ராகுல் காந்தி, பாஜகவுக்கு எதிரானவரா அல்லது இடது முன்னணிக்கு எதிரானவரா என்பதை முடிவு செய்யுங்கள் : பினராயி விஜயன்

கம்யூனிஸ்டு கட்சியை எதிர்த்து ராகுல்காந்தி, வயநாட்டில் போட்டியிடக்கூடாது என்று பினராயி விஜயன் வலியுறுத்தி உள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

திருச்சூர்,

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை களமிறக்கும்போது, பாஜகவை எதிர்த்துப் போட்டியிடுகிறதா அல்லது இடது முன்னணி கட்சியுடன் மோதுகிறதா என்பதை காங்கிரஸ் முடிவு செய்ய வேண்டும் என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார்.

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் நேற்று நவகேரள சதசு விழாவின் இரண்டாவது நாள் நிகழ்ச்சியில் முதல்-மந்திரியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவருமான பினராயி விஜயன் கலந்து கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அடுத்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பாஜனதாவை எதிர்கொள்ள இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது, வயநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தனது வேட்பாளரை நிறுத்தும்.

இந்தியா கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அங்கம் வகிக்கிறது என்பதால், ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிடுவது இரண்டு பங்காளிகளுக்கு இடையேயான சண்டையாக மாறிவிடும். எனவே ராகுல் பா,ஜனதாவை எதிர்த்துப் போராட வேண்டும். எங்களை எதிர்த்து அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன், "மாநிலங்களுக்கு இடையேயான அரசியல் போட்டிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல், பா.ஜனதாவின் பாசிசக் கொள்கைகளை எதிர்த்துப் போராடுவதில் ராகுல் காந்தி கவனம் செலுத்த வேண்டும்" என்று நேற்று கூறினார்.

கடந்த 2019- நாடாளுமன்ற தேர்தலில் வயநாட்டில் கம்யூனிஸ்டு வேட்பாளரை தோற்கடித்து 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com