

புதுடெல்லி,
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் உள்ள 548 மாவட்டங்களை தனிமைப்படுத்தி வைக்குமாறு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நேற்று ஆலோசனை தெரிவித்துள்ளது.
இந்த தகவலை பத்திரிகை தகவல் ஆணையம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது. அதில் சண்டிகார், டெல்லி, கோவா, ஜம்முகாஷ்மீரில் அனைத்து மாவட்டங்களும் தனிமைப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.