

பெங்களூரு,
கர்நாடக அரசின் சுகாதாரத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஜாவித் அக்தர் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதலில் கூறி இருப்பதாவது:-
கொரோனா பாதிக்கப்படு பவர்களை 4 வகையாக பிரித்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நோய் அறிகுறி இல்லாதவர்கள், லேசான பாதிப்பு உள்ளவர்கள், மிதமான பாதிப்பு, அதிக பாதிப்பு உள்ளவர்கள் என பிரிக்கப்பட்டுள்ளனர். இதில் நோய் அறிகுறி இல்லாதவர்கள், லேசான பாதிப்பு உள்ளவர்கள் வீட்டு தனிமையில் கண்காணிக்கப்படுவார்கள்.
வீட்டு தனிமையில் இருக்க போதுமான வசதி இல்லாதவர்கள், கொரோனா கண்காணிப்பு மையங்களில் வைத்து கண்காணிக்கப்படுவார்கள். அதே நேரத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் உடல்நிலைய பொறுத்து அவர்களை ஆஸ்பத்திரியில் அனுமதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.
கொரோனா பாதித்தவர்களில் மிதமான பாதிப்புக்கு உள்ளானவர்கள், அவர்களில் ஆக்சிஜன் அளவு 90 முதல் 94 சதவீதம் வரை உள்ளவர்கள், இதய துடிப்பு100-120 உள்ளவர்கள், அத்துடன் இணை நோய் உள்ளவர்கள் கொரோனா சுகாதார மையங்களில் அனுமதிக்கப்படுவார்கள். அதிக பாதிப்பு உடைய, இதய துடிப்பு 120 வரை உள்ள, ரத்த அழுத்தம் இயல்பை விட அதிகம் உள்ளவர்கள், இணை நோய் பாதிப்பு உள்ளவர்கள் கொரோனா மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவார்கள்.
கொரோனா மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு, காய்ச்சல் நீங்குவது, டைசி 3 நாட்கள் பாதிப்பு இருக்கக்கூடாது, ஆக்சிஜன் அளவு 95 சதவீதமாக இருக்க வேண்டும். அவ்வாறு உள்ளவர்கள் உடனே கொரோனா சுகாதார மையங்களுக்கு அனுப்பப்படுவார்கள்.
இவ்வாறு ஜாவித் அக்தர் தெரிவித்துள்ளார்.