குஜராத்தில் குறைந்து வரும் கொரோனா; கடந்த 24 மணி நேரத்தில் 14,737 பேர் குணமடைந்தனர்

குஜராத் மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,18,234 ஆக அதிகரித்துள்ளது.
குஜராத்தில் குறைந்து வரும் கொரோனா; கடந்த 24 மணி நேரத்தில் 14,737 பேர் குணமடைந்தனர்
Published on

காந்திநகர்,

குஜராத் மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 11,892 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,69,928 ஆக அதிகரித்துள்ளது.

அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 119 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் குஜராத் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,273 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 14,737 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இதன் மூலம் குஜராத்தில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,18,234 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 1,43,421 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக குஜராத் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com