கேரளாவில் குறைந்து வரும் கொரோனா; 16,671 பேருக்கு தொற்று உறுதி

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,671 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கேரளாவில் குறைந்து வரும் கொரோனா; 16,671 பேருக்கு தொற்று உறுதி
Published on

திருவனந்தபுரம்,

நாடு முழுவதும் கொரோனா 2வது அலையில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டன. எனினும், சமீப நாட்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றன. கேரளாவில் தொடர்ந்து எண்ணிக்கை அதிகரித்த நிலையிலேயே காணப்பட்டன.

இந்த சூழலில், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,671 பேருக்கு (நேற்று 17,983) கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளார்.

ஒரே நாளில் 14,242 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். 1,65,154 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 120 பேர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com