தீபத்தூண் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தமிழக அரசு செயல்படுத்தாமல் திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோவிலில் நேற்று தீபம் ஏற்றப்பட்டது
தீபத்தூண்
தீபத்தூண்
Published on: 

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலானது முருகப்பெருமானின் அறு படை வீடுகளில் முதற்படை வீடாகும்.திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.தர்காவும், தீபத்தூணும் குறைந்த இடைவெளியில் உள்ளதாக கூறியும், தீபத்தூ ணில் தீபம் ஏற்றினால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனவும் தெரிவித்து ஐகோர்ட்டு உத்தரவை தமிழக அரசு நிறைவேற்றவில்லை.

தீபம் ஏற்றப்படவில்லை

இந்தநிலையில் மதுரை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு, இந்த ஆண்டு மட் டும் கார்த்திகை தீப தினத்தன்று (அதாவது நேற்று) தீபம் ஏற்றிக்கொள்ள அனு மதித்தது. தீபம் ஏற்றும் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த மனு விசாரணைக்கு வரவில்லை.இதனால் தமிழக அரசு என்ன செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தமிழக அரசு செயல்படுத்தாமல் திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றப்பட்டது. ஆகம விதிப்படியே தீபம் ஏற்றப்பட்டதாக கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

கோர்ட்டில் முறையீடு

இந்த நிலையில் இன்று காலை சுப்ரீம் கோர்ட் கூடியதும், இந்த விவகாரம் தொடர்பாக மனுதாரர் ராமரவிகுமார் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட் உத்தரவு மீறப்பட்டு இருப்பதாகவும் தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்காக பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது, மனுவாக தாக்கல் செய்தால் பரிசீலிக்கிறோம் என்று நீதிபதிகள் கூறினர். துரதிர்ஷ்டவசமாக மலை மீதுள்ள தூணில் ஏற்ற முடியவில்லை என்றும் மாவட்ட ஆட்சியர் தரப்பிலும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

X