ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு


ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
x

அமித்ஷாவை விமர்சித்த விவகாரத்தில் ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சுல்தான்பூர்,

கடந்த 2018-ம் ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, அப்போதைய பா.ஜனதா தலைவர் அமித்ஷாவுக்கு எதிராக ஆட்சேபகரமான வார்த்தைகளை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூரில் உள்ள கோர்ட்டில் ராகுல்காந்திக்கு எதிராக விஜய் மிஸ்ரா என்ற பா.ஜனதா பிரமுகர், அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

நேற்று சுல்தான்பூர் கோர்ட்டில் இவ்வழக்கு விசாரணைக்கு வருவதாக இருந்தது. ஆனால், கமல் ஸ்ரீவஸ்தவா என்ற வக்கீல் மரணம் அடைந்ததால், நேற்று பணியாற்றுவது இல்லை என்று பார் அசோசியேசன் முடிவு செய்திருந்தது. எனவே, வக்கீல்கள் யாரும் ஆஜராகாததால், ராகுல்காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணையை ஜூலை 1-ந் தேதிக்கு கோர்ட்டு ஒத்திவைத்தது.

1 More update

Next Story