

பெங்களூரு,
இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகள் ஈரான் மீது போர் தொடுத்துள்ளன. இதில் ஈரான் நாட்டின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டார். இதற்கு பதிலடியாக அமெரிக்கா, இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை, டிரோன் தாக்குதலை நடத்தியது.
இந்த நிலையில், காமேனி படுகொலை குறித்து கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் கங்காவதி டவுனை சேர்ந்த பழ வியாபாரியான சந்திரசேகர் என்ற வாலிபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவதூறாக கருத்து பதிவிட்டதாக கூறப்படுகிறது.
இதை அறிந்த அப்பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பை சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பல் சந்திரசேகரிடம் தகராறு செய்து அவரை கொடூரமாக தாக்கினர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட சந்திரசேகர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இச்சம்பவம் குறித்து கங்காவதி டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.