ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பில் புதிய நவீன ஆயுதங்கள் வாங்க இந்திய ராணுவம் ஒப்பந்தம்

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ஆயுதம் கொள்முதலில் பாதுகாப்பு துறை கவனம் செலுத்தி வருகிறது.
ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பில் புதிய நவீன ஆயுதங்கள் வாங்க இந்திய ராணுவம் ஒப்பந்தம்
Published on

புதுடெல்லி,

பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு பாடம் புகட்ட, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடங்கப்பட்டது. கடந்த மே 7 அன்று பாகிஸ்தானில் உள்ள ஒன்பது பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது இந்திய ராணுவம் துல்லியமான தாக்குதல்களை நடத்தியது.

இந்த நடவடிக்கைக்கு பிறகு ஆயுதம் கொள்முதலில் பாதுகாப்பு துறை கவனம் செலுத்தி வருகிறது. வானில் நீண்ட தூரம் சென்று தாக்கும் ட்ரோன்கள் உள்ளிட்ட புதிய நவீன ஆயுதங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை அதிகரிக்க, அவசரகால கொள்முதல் திட்டத்தின் கீழ், ரூ.1,981 கோடியில் ஆயுதம் கொள்முதல் செய்ய, 13 ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக ரூ.2,000 கோடியில் ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இதற்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

* எதிரி ட்ரோன்களை துல்லியமாக அழிக்கும் ஆயுதங்கள்.

* குறைந்த அளவிலான இலகுரக ரேடார்கள் (LLLR).

* மிக குறுகிய இடத்தில் துல்லியமாக தாக்கும் ஏவுகணைகள்.

*குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள்

* இரவிலும் பார்வையிடும் திறன் கொண்ட கருவிகள்

* பாலஸ்டிக் ஹெல்மெட்

* வெடிமருந்துகள் மற்றும் பல்வேறு வகையான ட்ரோன்கள்

* புல்லட்ட ப்ரூப் உடைகள் வாங்கப்பட உள்ளன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com