யுபிஐ பரிவர்த்தனைக்கான கட்டண வசூல் ஒத்திவைப்பு

டீக்கடை முதல் நகைக்கடை வரை யு.பி.ஜ. பணப்பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது.

யுபிஐ பரிவர்த்தனைக்கான கட்டண வசூல் ஒத்திவைப்பு
Published on: 

புதுடெல்லி,

ரூ.2,000க்கு மேற்பட்ட யுபிஐ பணப்பரிவர்த்தனைக்கு அறிவிக்கப்பட்ட கட்டண வசூல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள கடைகள், ஓட்டல் கள், வணிக நிறுவனங்கள் என அனைத்து பகுதிகளிலும் யு.பி.ஐ. மூலம் பணப்பரிவர்த்தனை செய்வது அதிகரித்து வருகிறது. இதனால் ரூபாய் நோட்டுகளின் புழக்கம் குறையத் தொடங்கியுள்ளது. இத்தகைய பணப்பரிவர்த்தனை மூலம் சில்லறை பிரச்சினைக்கு முற்றிலும் தீர்வு காணப்பட்டது.

ரூபாயை கையில் எடுத்து செல்லும் தேவை இல்லாத நிலைய ஏற்பட்டது. டீக்கடை முதல் நகைக்கடை வரை யு.பி.ஜ. பணப்பரிவர்த்தனை உள்ளது. இவ்வாறு ரூபாய் நோட்டுகளை மறக்கும் வகையில் யு.பி.ஐ. பணப்பரிவர்த்தனை தற்போது வியாபாரிகள், மக்களிடையே பிரபலமாகி உள்ளது.

இந்த நிலையில் ரூ.2 ஆயிரத்துக்கு மேல் குறிப்பிட்ட வியாபார யு.பி.ஐ. பணப்பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீத கட்டணம் விதிக்கப்படும் என்ற மத்திய அரசு அறிவித்து இருந்தது.

இந்த அறிவிப்பு வியாபாரிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த புதிய நடைமுறை வருகிற 15-ந் தேதி முதல் அமலுக்கு வருவதாக கூறப்பட்டது.

இந்தநிலையில், ரூ.2,000க்கு மேற்பட்ட யுபிஐ பணப்பரிவர்த்தனைக்கு அறிவிக்கப்பட்ட கட்டண வசூல் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தீபாவளிக்கு பிறகு யுபிஐ பரிவர்த்தனைக்காக கட்டண வசூல் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே அக்.15 முதல் திட்டம் நடைமுறைக்கு வரும் என அறிவிகப்பட்டிருந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com