டெல்லியில் கடும் பனி மூட்டம்: 11 ரயில்கள் தாமதம்

டெல்லியில் கடும் பனி மூட்டம் நிலவுகிறது. இதனால், 11 ரயில்கள் தாமதம் ஆகியுள்ளன.
டெல்லியில் கடும் பனி மூட்டம்: 11 ரயில்கள் தாமதம்
Published on

புதுடெல்லி,

வடமாநிலங்களில் கடும் பனி நிலவி வருகிறது. விடியற்காலை நேரங்களில் பனி மூட்டம் அதிக அளவில் நிலவி வருவதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் சிரமப் படுகின்றனர்.

குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டதால் இன்று காலை டெல்லி ரெயில் நிலையத்திற்குள் நுழைய முடியாமல் ரெயில்கள் தவித்தன. அந்த அளவிற்கு பனி மூட்டம் நிலவியது. அதேபோல் ரெயில் நிலையத்தில் இருந்தும் ரெயில்கள் புறப்பட முடியவில்லை. இதன் காரணமாக 11 ரயில்கள் தாமதம் ஆகியுள்ளன. பனி மூட்டத்துடன் காற்று மோசம் அடைந்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com