டெல்லியில் கடும் பனி; 16 ரெயில்கள் காலதாமதமுடன் இயக்கம்

டெல்லியில் கடும் பனியால் 16 ரெயில்கள் காலதாமதமுடன் இயக்கப்படுகின்றன.
டெல்லியில் கடும் பனி; 16 ரெயில்கள் காலதாமதமுடன் இயக்கம்
Published on

டெல்லி,

டெல்லியில் கடந்த சில வாரங்களாக பனிப்பொழிவு கடுமையாக இருந்து வருகிறது. இதனால் சாலைகளில் வாகனங்களில் செல்வோருக்கு தெளிவான பாதை தெரியாமல் அதிக சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இந்த கடும் பனிப்பொழிவால் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள், பணிக்கு செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிப்படைந்து உள்ளனர்.

இதேபோன்று நகரின் பல பகுதிகளில் தீவிரமுடன் குளிர் காற்று வீசி வருகிறது. இதனால் முனிர்கா உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் பலர் இரவு நேர முகாம்களில் தஞ்சம் புகுந்து இரவு பொழுதினை கழித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடும் பனி மற்றும் தெளிவற்ற வானிலையால் 16 ரெயில்கள் காலதாமதமுடன் இயக்கப்படும் என்று தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com