டெல்லி: கடும் பனிமூட்டம் காரணமாக 45 ரயில்கள் தாமதம், 22 ரயில்கள் ரத்து

டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக 45 ரயில்கள் தாமதம் ஆகியுள்ளன. 22 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. #fog | #delhi
டெல்லி: கடும் பனிமூட்டம் காரணமாக 45 ரயில்கள் தாமதம், 22 ரயில்கள் ரத்து
Published on

புதுடெல்லி,

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் அதிகாலை வேளைகளில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. மூடு பனி போன்று நிலவுவதால் சில மீட்டர்கள் தொலைவு கூட கண்ணுக்கு புலப்படவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்குகளை எரிய விட்ட படியே, சென்றதை காண முடிந்தது. பனிமூட்டம் காரணமாக கடந்த சில வாரங்களாகவே ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இன்றும் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பனிமூட்டம் காரணமாக 45 ரயில்கள் தாமதம் ஆகியுள்ளன. 22 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 4 ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. டெல்லிக்கு வர இருந்த 2 விமானங்கள் தாமதம் ஆகியுள்ளன. 6 விமானங்களின் புறப்பாடும் தாமதம் ஆகியுள்ளன. அடர் பனி காரணமாக டெல்லியில் காற்றின் மாசு அளவும் அதிகரித்துள்ளது. #fog | #delhi

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com