டெல்லியில் தடுப்பூசி போடும் பணி மும்முரம்: 2,95,000 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது - ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,அதிஷி தகவல்

டெல்லியில் மொத்தம் 2,95,000 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அதிஷி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் தடுப்பூசி போடும் பணி மும்முரம்: 2,95,000 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது - ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,அதிஷி தகவல்
Published on

புதுடெல்லி,

கொரோனா இரண்டாவது அலையில், டெல்லியில் ஏற்பட்ட மருத்துவ நெருக்கடி உலகையே உலுக்கியது. அங்கு நிலவிய ஆக்சிஜன் தட்டுப்பாடு உச்ச நீதிமன்றத்தின் விமர்சனத்துக்குள்ளானது. இந்தநிலையில், டெல்லியில் 2 மாதங்களுக்கும் மேல் கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னர், டெல்லியில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறையத் தொடங்கியது. டெல்லியில் 135 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தடுப்பூசிகள் நிலவரம் தொடாபான அறிக்கையை வெளியிட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அதிஷி கூறியுள்ளதாவது:

18-44 வயதினருக்கு போடுவதற்காக டெல்லி அரசிடம் 2,58,000 கோவிஷீல்ட் தடுப்பூசிகளும், 37,000 கோவேக்ஸின் தடுப்பூசிகளும் இருப்பில் உள்ளன.

போதுமான தடுப்பூசிகள் கையிலிருப்பதால் 18-44 வயதினருக்கான தடுப்பூசி போடும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. டெல்லிக்கு நேற்று முன் தினம் 1,67,000 தடுப்பூசிகள் புதிதாக வரப்பெற்றன. தற்போதுள்ள கோவிஷீல்ட் மற்றும் கோவேக்ஸின் தடுப்பூசிகள் முறையே 14 மற்றும் இரண்டு நாள்களுக்கு வரும். எனவே அதிக அளவில் மக்கள் தங்கள் பெயாகளை கோவின் செயலியில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

45 வயதுக்கு மேலானவாகளைப் பொருத்தவரை 8,50,000 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. இவற்றில் 7,65,000 கோவிஷீல்ட் தடுப்பூசிகளும், 80,000 கோவேக்ஸின் தடுப்பூசிகளும் அடங்கும். இவற்றில் கோவேக்ஸின் 6 நாள்களுக்கும், கோவிஷீல்ட் அடுத்த 58 தினங்களுக்கும் வரும். பொதுமக்கள் தடுப்பூசி மையங்களுக்கு சென்று தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம்.

டெல்லியில் நேற்று முன் தினம் மொத்தம் 77,345 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன. இவற்றில் 62,230 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 15,115 பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியும் போட்டுக்கொண்டுள்ளனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com